மே 1 தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் வாழ்த்து.!
உலகத் தொழிலாளர் தினத்தையொட்டி உழைக்கின்ற அனைத்து மக்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
உலகத் தொழிலாளர் தினத்தையொட்டி உழைக்கின்ற அனைத்து மக்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், உடல் உழைப்பை மூலதனமாகக் கொண்டு, உலகை வாழ வைக்கும் உழைப்பாளிகள், தங்கள் உரிமைகளை வென்றெடுத்த திருநாளாகவும், உழைப்பின் மேன்மையை உலகுக்கு உணர்த்தும் நன்னாளாகவும் மே நாள் கொண்டாடப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாட்டின் வளர்ச்சிக்காக அயராது உழைக்கும் தொழிலாளர் பெருமக்கள் அனைவரும், எல்லா நலன்களையும், வளங்களையும் பெற்று மகிழ்வுடன் வாழ்ந்திட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.