வேலை நேரம் உயர்த்துவதற்கு தொடர் எதிர்ப்பு: தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த அறிவிப்பு!
வேலை நிறுத்தை உயர்த்துவதற்கு பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் செய்வதற்காக அறிவிப்பு.
தமிழ்நாட்டின் தொழிலாளர்களின் வேலை நேர சீர்திருத்தங்களை மேற்கொள்ள ஏதுவாக சட்ட திருத்த மசோதா உருவாக்கப்பட்ட ிருக்கிறது இதில் எட்டு மணி நேரமாக இருந்த வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தி, அதற்குரிய சம்பளத்தையும் வழங்கவும் வழிவகை செய்யப்பட்டு சட்டசபையில் 21-ஆம் தேதி சட்ட திருத்தம் மசோதா செய்யப்பட்டது. இந்த மசோதாவிற்கு அரசியல் கட்சிகள் தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்புகளை கிளப்பி இருக்கிறது.
தமிழகத்தில் இந்த ஒரு சர்ச்சை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக அனைத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில தலைவர்கள் பலர் தலைமை தாங்கினார்கள். விலைநிறுத்த வேலை நேரத்தை அதிகரிப்பு தத்து தொடர்பாக தொழிற்சங்கங்களிடம் தமிழ்நாடு அரசு எந்த ஒரு கலந்த ஆலோசனையும் செய்யவில்லை என்று கூறப்பட்டு இருக்கிறது.
இது தொடர்பாக கோரிக்கை உயர்மட்ட குழுவான தமிழ்நாடு மாநில தொழிலாளர் ஆலோசனைகள் வாரியத்தின் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டிருந்ததாகவும் தொழிலாளர் அமைச்சர் முன்னிலையில் அதை பரிசீலிக்க இயலாது என நிராகரித்ததையும் அவர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள். எனவே மக்களுக்கு உரிய நிவாரணம் தர வேண்டும் குறிப்பாக வேலை நேரத்தில் உயர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற 26 ஆம் தேதி அன்று போராட்டம் தொடங்கி ஒன்பதாம் தேதி வரை போராட்டம் நீடிப்பதாகவும், அதன் பிறகு மே 12 ஆம் தேதி அன்று வேலை நிறுத்தம் செய்வதாகவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy: News