மே 1ம் தேதி மீன் மார்க்கெட், இறைச்சிக்கடைக்கு தடை.. தமிழக அரசு.!
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக இரவுநேர ஊரடங்கு மற்றும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு அமலில் உள்ளது.
தமிழகத்தில் மே 1ம் தேதி சனிக்கிழமை அன்று மீன் மார்க்கெட் மற்றும் இறைச்சிக் கடைகளை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக இரவுநேர ஊரடங்கு மற்றும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்நிலையில், கூட்டம் அதிகமாக கூடும் இறைச்சிக்கடைகளை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் அதிகளவு இறைச்சிக்கடைகளுக்கு செல்வது வழக்கம்.
இதனை கட்டுப்படுத்தும் விதமாக வருகின்ற மே 1ம் தேதி மீன் மற்றும் இறைச்சிக்கடைகளை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.