நிவாரணம் வழங்காததால் மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாய சங்கத்தினர்!
நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்காததை கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்காததை கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்டா பகுதிகளில் தொடர்ந்து பெய்த மழையால் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்திருந்த நெற்பயிர்கள் சேதமடைந்தது. இதனால் விவசாயிகளுக்கு பல லட்சக்கணக்கான அளவில் நஷ்டம் ஏற்பட்டது. இதற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்திருந்தனர்.
ஆனால் உரிய இழப்பீடு வழங்காதத்தை கண்டித்து மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தை விவசாய சங்கத்தினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்புக்கு இருந்த போலீசாருக்கும், விவசாய சங்கத்தினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த சம்பவம் ஆட்சியர் வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Source, Image Courtesy: Daily Thanthi