தி.மு.க மகளிரணி அமைப்பாளரை தவிக்கவிட்ட தி.மு.க பிரமுகர்... டாஸ்மாக் "பார் ஏலம்"... ஆசை காட்டி மோசம் செய்த துரோகம்..!

In Mayiladuthurai DMK Women Cadre Complain against DMK Party Cadre;

Update: 2021-10-05 02:21 GMT
தி.மு.க மகளிரணி அமைப்பாளரை தவிக்கவிட்ட தி.மு.க பிரமுகர்... டாஸ்மாக் "பார் ஏலம்"... ஆசை காட்டி மோசம் செய்த துரோகம்..!

பார் ஏலம் எடுத்துத் தருவதாக பணம் வாங்கிக்கொண்டு கொலை மிரட்டல் விடுப்பதாக திமுக தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்டத் தலைவர் மீது திமுக மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

டாஸ்மாக் கடையில் பார் வைக்க தற்போது அனுமதி வழங்கப்படாத நிலையில், டாஸ்மாக் பார் நடத்த தி.மு.க.வைச் சேர்ந்த பெண் தி.மு.க. பிரமுகரிடமே பணம் கொடுத்து ஏமாந்த சம்பவம் திமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறையில் திமுக தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்டத் தலைவர் ஆர்.எஸ்.ஸ்ரீதர்பதவி வகித்து வருகிறார். இவர் திமுக மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் சாந்தி என்பவரிடம், பார் ஏலம் எடுத்துத் தருவதாக ரூ.3 லட்சம் பணம் வாங்கிக்கொண்டு இதுநாள் வரையிலும் எதுவும் செய்து கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார்.

ஜூலை 1-ஆம் தேதி ஸ்ரீதரின் உதவியாளர் செந்தில் என்பவர் மயிலாடுதுறை அருகே மணல்மேடு நடுத்திட்டு கிராமத்திலுள்ள தனது வீட்டில் வந்து வாங்கிச் சென்றதாகவும், இதுகுறித்து பலமுறை தொடர்ந்து கேட்ட பிறகு கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி பணத்தைத் திருப்பித்தர முடியாது என்று ஆபாசமாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக சாந்தி தெரிவித்துள்ளார்.

தி.மு.க. மாவட்டச் செயலாளர், நகரச் செயலாளர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரிடம் முறையிட்டும் பலன் கிடைக்காததால் காவல்துறையினரை அணுகியுள்ள சாந்தி, கட்சித் தலைமை தலையிட்டு தீர்வு பெற்றுத்தர வேண்டும் விரக்தியுடன் முறையிட்டுள்ளார்.










Tags:    

Similar News