38வது மாவட்டமாக மயிலாடுதுறை உதயம்.. முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.!

38வது மாவட்டமாக மயிலாடுதுறை உதயம்.. முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.!

Update: 2020-12-28 08:54 GMT

தமிழகத்தில் இதற்கு முன்னர் 32 மாவட்டங்கள் இருந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நெல்லை மாவட்டத்தை இரண்டாக பிரித்து தென்காசி மாவட்டம் என்று உருவானது.

இதேபோன்று விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சியும், வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர், ராணிப்பேட்டையும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டும் என மொத்தம் 5 மாவட்டங்கள் புதியதாக உருவானது. புதிய மாவட்டங்களுக்கு ஆட்சியர்களும் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறையை தனி மாவட்டமாக இன்று உதயமாகிறது. அதற்கான அரசாணை ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தின் எல்லைகளை வரையறை செய்வதற்கு, சிறப்பு அதிகாரியாக லலிதா ஐ.ஏ.எஸ். மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக ஸ்ரீநாதா ஐ.பி.எஸ். ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று 28ம் தேதி காலை காலை 9.30 மணிக்கு நடைபெறும் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காணொலிக்காட்சி வழியாக மயிலாடுதுறை புதிய மாவட்டத்தை தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் தமிழகத்தின் மாவட்டங்களின் எண்ணிக்கை 38 ஆக அதிகரிக்கிறது.

Similar News