தமிழகத்தின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை உருவாகிறது.. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைக்கிறார்.!

தமிழகத்தின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை உருவாகிறது.. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைக்கிறார்.!

Update: 2020-12-27 12:31 GMT

தமிழகத்தில் புதியதாக மயிலாடுதுறை மாவட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடக்கி வைக்கிறார். நாகப்பட்டினம் மாவட்டத்தைப் பிரித்து மயிலாடுதுறையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப்படும் எனச் சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதற்கான அரசாணை ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டு எல்லைகளை வரையறை செய்யச் சிறப்பு அதிகாரியாக லலிதா நியமிக்கப்பட்டார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக ஸ்ரீநாதா நியமிக்கப்பட்டார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தின் மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய 4 வட்டங்களைக் கொண்டு தமிழ்நாட்டின் 38வது மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனைச் சென்னைத் தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடக்கி வைக்கிறார்.

இந்த அறிவிப்புக்கு மயிலாடுதுறை மக்கள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். அனைத்து அலுவலகங்கள் தங்களது மாவட்டங்களிலேயே கிடைக்கும் எனவும் கூறியுள்ளனர்.

Similar News