மயிலாடுதுறையில் தூர் வாராமல் இருக்கும் ஏரி, குளங்கள் தூர்வாரப்படும்.. உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி.!

மயிலாடுதுறையில் தூர் வாராமல் இருக்கும் ஏரி, குளங்கள் தூர்வாரப்படும்.. உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி.!

Update: 2020-12-08 16:37 GMT

மயிலாடுதுறை திருவாரூர் நாகப்பட்டினம் மாவட்டங்களில் முதலமைச்சர் ஆய்வு செய்ய உள்ளதாக மயிலாடுதுறையில் வெள்ள பாதிப்புகளை அமைச்சர்கள் பார்வையிட்டனர். புயல் மழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டம் நல்லாடை, முழையூர், உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஓ எஸ்.மணியன் ஆகியோர் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்கள்: நாகப்பட்டினம் திருவாரூர் மயிலாடுதுறை பகுதிகளில் வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாசி ஆய்வு செய்கிறார். கடந்த ஆண்டு அனைத்து ஆறு, குளம் தூர்வாரப்பட்டு வெள்ள நீர் விரைவாக வடிந்து வருவதாகவும் பயிர்கள் சேதம் குறித்து முதலமைச்சர் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்குவார்.

எனினும் இந்த ஆண்டு ஓரிரு இடங்கள் தூர் வாராமல் இருந்தால் அவற்றையும் தூர்வார முதலமைச்சர் உத்தரவிடுவார் என்று தெரிவித்தனர். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பவுன்ராஜ் வி.ராதாகிருஷ்ணன நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

Similar News