145வது வயதில் அடியெடுத்து வைக்கும் மயிலாடுதுறை ரயில் நிலையம்.!

145வது வயதில் அடியெடுத்து வைக்கும் மயிலாடுதுறை ரயில் நிலையம்.!

Update: 2021-02-16 10:18 GMT

மிகவும் பழமை வாய்ந்த மயிலாடுதுறை ரயில் நிலையத்தின் 145வது தொடக்க நாளை முன்னிட்டு ரயில் நிலையத்தில் பயணிகள் கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். இந்த ரயில் நிலையம் ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் கட்டமைக்கப்பட்டது. தென்மாவட்டங்களை இணைக்கும் முக்கிய ரயில் நிலையமாக மயிலாடுதுறை ரயில் நிலையம் விளங்கியது.

சென்னையில் இருந்து விழுப்புரம், மயிலாடுதுறை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, மணியாச்சி வழியாக தூத்துக்குடிக்கு அப்போதைய தென்னக ரயில்வே, இருப்புப்பாதை அமைக்கப்பட்டது.

அந்த வகையில் மயிலாடுதுறை - தஞ்சாவூர் பாதை 1877ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி முடிவடைந்து தென்னிந்திய ரயில்வே நிர்வாகத்தால் மீட்டர்கேஜ் ரயில் பாதையில் முதன்முதலாக ரயில்கள் இயக்கப்பட்டன.

இந்நிலையில், 145-வது ஆண்டை முன்னிட்டு, மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் மயிலாடுதுறை மாவட்ட ரயில்வே சங்கம் சார்பில் சங்கத் தலைவர் கணேசன் தலைமையில் பயணிகள் கேக் வெட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதில் காவல்துறையினர் ரயில்வேத்துறையினர் கலந்து கொண்டனர்.
 

Similar News