எச்சரிக்கைக்கு பணிந்த ஆளும் அரசு - தருமபுரம் ஆதினத்தின் பட்டினப்பிரவேசத்திற்கு அனுமதி!
மயிலாடுதுறை மாவட்டத்தில் மிகவும் பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீனம் மடம் அமைந்துள்ளது. அங்கு வருடம்தோறும் ஆதீன குரு முதல்வரின் குருபூஜை நாளில் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது ஆதீனத்தை பல்லக்கில் அமரவைத்து வீதி உலா வருவது காலம், காலமாக நடந்து வருகிறது. ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று திராவிடர் கழகம் தி.மு.க. அரசுக்கு கோரிக்கை விடுத்தது. இதனால் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் தடை விதித்தார்.
இந்த தடைக்கு ஆதீன மடங்கள் மற்றும் இந்து அமைப்புகள், பா.ஜ.க. அ.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கண்டனங்களை தெரிவித்தது. மேலும், ஆதீன நிகழ்ச்சி அன்று நானே நேரில் சென்று பல்லக்கை சுமப்பேன் என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அதிரடியான அறிவிப்பை வெளியிட்டார். இதனால் பயந்து போன தி.மு.க. அரசு வேறு வழியின்றி தற்போது நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியுள்ளது.
Source, Image Courtesy: Daily Thanthi