முதல் முறையாக தமிழில் மருத்துவ படிப்பு பாட புத்தகங்கள்: டிசம்பரில் வெளியிட முடிவு!
முதல்முறையாக தமிழில் மருத்துவ பாடப்புத்தகங்கள் மொழிபெயர்ப்பு பணிகள் தீவிரம்.
இந்தியாவில் முதல் முறையாக மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தியில் மூன்று மருத்துவ படிப்பு பாட புத்தகங்கள் வெளியிடப்பட்டன. அதைப்போல் உத்தரப் பிரதேசத்திலும் மருத்துவம், என்ஜினியரிங் பாட புத்தகங்கள் ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் தற்போது தமிழ்நாட்டில் முதல்முறையாக தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்காக மருத்துவ படிப்பு பாட புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக கிரேட்ஸ் அட்டானாமி பார் ஸ்டுடென்ட்ஸ் முதலிய நான்கு மருத்துவ பாட புத்தகங்கள் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைகள் கழகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் முன்பு இந்து புத்தகங்களை இவ்வாண்டு கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தமிழ் மொழியில் மொழிபெயர்க்கும் பணியில் மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் முப்பது பேரும், பயிற்சி டாக்டர்களும் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
சிறந்த பாட அறிவுடன் நல்ல டாக்டர்கள் உருவாவார்கள்:
மொத்தம் 25 பாடப் புத்தகங்கள் மொழிபெயர்க்கப்பட திட்டமிட்டு இருப்பதாகவும், அதில் 13 பாட புத்தகங்கள் முக்கியமான பாடங்களாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. எம்.பி.பி.எஸ் புத்தகங்கள் ஆங்கிலத்தில் உள்ளதால் மாணவர்கள் சிலரால் அதை புரிந்து கொள்ள முடியாத நிலை இருக்கிறது என்றும், தற்போது அவை தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட இருப்பதால் மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியும் என்றும் சிறந்த பாட அறிவுடன் நல்ல டாக்டர்கள் உருவாவார்கள் என்று கூறுகிறார்கள் மொழிபெயர்ப்பாளர்கள்.
Input & Image courtesy: Thanthi News