தென் மாவட்டங்களில் மிக கனமழை: எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!

Update: 2022-04-10 13:59 GMT

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்றும், நாளையும் தென்மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இது பற்றி சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் கூறியிருப்பதாவது: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் லேசான மழை பெய்யலாம்.

மேலும், தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா, கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதியிலும் ஒரு சில இடங்களில் கன முதல் மின கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் நாளை ஒரு சில இடங்களில் இடியுடன், லேசான மழை பெய்யும். தென்மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source: Maalaimalar

Image Courtesy: Telegraph India

Tags:    

Similar News