கோவிலை திறக்க பக்தர்கள் போராட்டம்.. சீல் வைக்க காரணம் என்ன?
பூட்டி வைக்கப்பட்டிருக்கும் திரௌபதி அம்மன் கோவில்.
விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் பிரசித்தி பெற்ற கோயில் ஒன்று அமைந்திருக்கிறது அதுதான் திரௌபதி அம்மன் கோவில். இந்த கோவிலில் கடந்த ஏப்ரல் 2023 ஏழாம் தேதி திருவிழா நடைபெற்றது. அப்பொழுது ஒரு தரப்பினர் கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிய வருகிறது. மேலும் அந்த சமூகத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் கோயிலுக்குள் செல்ல முயன்று பொழுது மற்றொரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்த அந்த வாலிபரை தாக்கியதாகவும் கூறப்பட்டு இருக்கிறது. இதனால் கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதி மறுத்ததை கண்டித்தும், வாலிபர் தாக்கப்பட்டதை கண்டித்தும் சாலை போராட்டத்தின் மக்கள் ஈடுபட தொடங்கினார்கள்.
இதன் காரணமாக இப்பொழுது அந்த கோவில் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டு இருக்கிறது. இதுவரை இரண்டு தரப்பினரும் எந்தவிதமான உடன்பாட்டிற்கும் வரவில்லை. அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் இந்த பகுதியில் குவிந்திருக்கிறார்கள்.இறுதி தீர்ப்பு வரும் வரை இரண்டு தரப்பினரும் கோவிலுக்குள் நுழையாத வகையில் அரசு தற்போது கோவிலை பூட்டி வைத்திருக்கிறது.
திமுக அரசின் இந்த செயல்பாடு பெருமக்களின் திரௌபதி வழிபாட்டை குலைத்து சீரழிக்கும் நோக்கத்தில் அமைந்திருப்பதாகவும், திமுக அரசு திரௌபதி கோவிலை உடனடியாக விடுவித்து பட்டா நிலத்தில் இருக்கிற அந்த கோவிலை அபகரிக்கிற முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.
Input & Image courtesy: News