28 ஏக்கர் வேதாரண்யம் கோவில் சொத்து - நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?

28 ஏக்கருக்கும் மேலான வேதாரண்யம் கோவில் சொத்துக்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு.

Update: 2022-06-24 01:48 GMT

நாகை மாவட்டம் அருகில் வேதாரணியம் கோவில் நிலங்களை பாதுகாப்பாக மீட்பதற்கு தொடர்பான மனு. இந்து சமய அறநிலையத்துறை தற்போது தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு கோவில் நிலங்களை முறையாக பராமரிக்கிறதா? இல்லையா? என்பது குறித்து பக்தர்கள் சார்பில் ஒரு குழப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது. ஏனெனில் பல்வேறு ஏக்கர் மதிப்புள்ள கோவில் நிலங்கள் பராமரிப்பு இன்றி அந்நிய நபர்களின் சொத்துக்களின் ஒரு பகுதியாக உள்ளாகி இருப்பது ஆங்காங்கே பார்க்கும் செயலாக காணப்படுகிறது. அந்த வகையில் தற்போது நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அமைந்துள்ள கோவில் நிலத்திற்கு சொந்தமான 28 ஏக்கர் நிலம் பராமரிப்பின்றி கிடக்கிறது. 


மேலும் கோவில் நிலங்களை மீட்டு முறையாக பராமரிப்பது குறித்து பல்வேறு விரிவான அறிக்கைகளை அரசு சமர்ப்பிக்குமாறும் மேலும் தங்களுடைய பதில் அளிக்குமாறும் சென்னை உயர் நீதிமன்றம் தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த மனுவை சேலம் மாவட்ட ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்துள்ளார் மேலும் வேதாரண்யத்தில் உள்ள வேதாரண்யேஸ்வர சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்டு தர கோரிக்கை வைத்துள்ளார். மேலும் இது தொடர்பாக மாவட்ட கலெக்டருக்கும் செய்திகளை அனுப்பியதாக கூறப்படுகிறது ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை என்று அவர் கூறினார். 



வேதாரண்யேஸ்வர சுவாமி கோவிலுக்கு, 28 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நிலம் உள்ளது. எனவே அரசு தனிக்குழு அமைத்து இந்த சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் தன்னுடைய மனுவில் கூறியுள்ளார்..அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்குமாறு கூறியுள்ளார். மேலும் இந்த மனு தொடர்பான தங்களுடைய முடிவை உடனடியாக தமிழக அரசு தெரிவிக்குமாறு நீதிபதிகள் சார்பில் தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது. 

Input & Image courtesy: Dinamalar news

Tags:    

Similar News