ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் சிலை... ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்ட மத்திய அரசு...

நமது பெருமைமிகு பாராம்பரியம் தாயகத்திற்கு மீட்டுவர தொடர்ச்சியாக பணியாற்றி வரும் மத்திய அரசு.

Update: 2023-04-26 01:29 GMT

வெளிநாடுகளில் உள்ள நமது பெருமைமிகு தேசிய பாராம்பரியத்தைத் தாயகத்திற்கு மீட்டுவருவதற்கு மத்திய அரசு உறுதி பூண்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டம், பொட்டவெளி வெள்ளூரைச் சேர்ந்த ஸ்ரீ வரதராஜ பெருமாள் விஷ்ணு கோவிலில் இருந்து கடத்தப்பட்ட 14 மற்றும் 15-ம் நூற்றாண்டு சோழர் கால ஹனுமன் உலோக சிலை, மீட்கப்பட்டு ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.


இதுவரை 251 பழமைவாய்ந்த பொருட்கள் பல்வேறு நாடுகளில் இருந்து மீட்கப்பட்டிருப்பதாகவும், அவற்றில் 238 பொருட்கள், கடந்த 2014ம் ஆண்டு முதல் தற்போது வரை மீட்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலளித்து, பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, "நமது பெருமைமிகு பாரம்பரியத்தை தாயகத்திற்கு மீட்டுவருவதை உறுதிசெய்வதற்கு நாங்கள் தொடர்ச்சியாகப் பணியாற்றி வருகிறோம்" என கூறினார்.


இந்தியாவில் இருந்து கடத்தல் செய்யப்பட்ட பல்வேறு கோவில்களின் சிலைகள் தற்பொழுது மோடி அரசாங்கத்தின் மூலமாக மீட்கப்பட்டு வருகிறது.  துரிதமாக வெளிநாடுகளில் இருக்கும் இந்திய சிலைகளை அடையாளம் கண்டு அவற்றை உரிய கோவில்களிடம் ஒப்படைக்கும் பொறுப்பை அரசாங்கம் செய்து வருகிறது. 

Input & Image courtesy: News

Tags:    

Similar News