தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை: எச்சரிக்கை செய்த வானிலை மையம்!

தமிழகத்தில் திருச்சி, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Update: 2021-11-03 08:31 GMT

தமிழகத்தில் திருச்சி, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மற்றும் தென் தமிழகத்தை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்து வருகின்ற 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதன்படி டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும் பெய்யும். மேலும், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, சேலம், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கள் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மழை பெய்யும். மற்றும் ஏனைய மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Puthiyathalamurai


Tags:    

Similar News