சென்னையில் மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை.!

சென்னையில் மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை.!

Update: 2021-02-20 10:18 GMT

சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் குறைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள், சென்னை மாநகரத்தை உலகத்தரத்திற்கு மேம்படுத்த, பல்வேறு சிறப்பான உட்கட்டமைப்பு திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தினார்கள். பெருநகர சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகவும், மக்களின் பயண நேரத்தைக் குறைப்பதுடன், பயணம் எளிமையாகவும், வசதியாகவும் அமைய, மாண்புமிகு அம்மா அவர்கள், தொலை நோக்குப் பார்வையோடு, மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்தார்கள்.

மாண்புமிகு அம்மாவின் அரசும், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை மிகுந்த முனைப்புடன் செயல்படுத்தி வருகின்றது. அதன்  விளைவாகத்தான், இன்று இத்திட்டத்தின் கட்டம் 1 முழுமையாக முடிக்கப்பட்டு, பல்வேறு வழித்தடப் பகுதிகளில் 54.15 கி.மீ நீளத்திற்கு பயணிகள் சேவை சிறப்பாக நடைபெற்று வருகின்றது. 118.90 கி.மீ நீளத்திற்கு பயணிகள் சேவை சிறப்பாக நடைபெற்று வருகின்றது. 118.90 கி.மீ நீளத்திலான சென்னை மெட்ரோ ரயில் கட்டம் 2க்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 29.6.2015இல் இருந்த சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பயணிகள் சேவையை துவக்கியது.

5 ஆண்டுகள் மெட்ரோ சேவையை வெற்றிகரமாக முடித்து 6ஆம் ஆண்டில் தனது சேவையைத் தொடர்கிறது. இதுவரை 7.25 கோடி பயணிகள் மெட்ரோ ரயில் சேவைகளைப் பயன்படுத்தியுள்ளனர். மெட்ரோ ரயில் சேவையை பெருவாரியான பொதுமக்கள் பயன்படுத்தும் வண்ணம், அதன் கட்டணம் குறைக்கப்பட வேண்டும் என்று பொதுமக்களிடம் பெறப்பட்ட கோரிக்கைகளை ஏற்று சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் கீழ்கண்டவாறு குறைக்கப்படும் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இவ்வாறு முதலமைச்சர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
 

Similar News