மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு: பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகம்.!

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 83.29 அடியாக இருந்தது. அணையின் நீர் இருப்பு 45.31 டிஎம்சியாக உள்ளது.

Update: 2021-07-02 08:37 GMT

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 83.29 அடியாக இருந்தது. அணையின் நீர் இருப்பு 45.31 டிஎம்சியாக உள்ளது.

அதே போன்று மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,123 கனஅடியில் இருந்து 1,101 கனஅடியாக குறைந்தது. டெல்டா பாசனத்திற்கு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு வினாடிக்கு 15,000 கனஅடியாக உள்ளது.


 



மேட்டூர் அணைக்கு நீர்வரத்தைவிட பாசனத்திற்கு வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். நீர்வரத்து குறைவாக இருக்கும் பட்சத்தில் டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிற்களுக்கு இந்த ஆண்டு முழுமையாக நீர் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Similar News