பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும் - கறவை மாடுகளுடன் விவசாயிகள் போராட்டம்!

பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி கறவை மாடுகளுடன் விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-10-21 01:55 GMT

தமிழக முழுவதும் ஆவின் மூலம் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து ஒரு லிட்டர் பால் 32 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பால் மூலம் உற்பத்தி செய்யக்கூடிய தயிர், நெய் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலைகளும் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் பால் கொள்முதல் விலை பல வருடங்களாக உயர்த்தப்பட வில்லை.


கடந்த நான்கு ஆண்டுகளாக பால் கொள்முதல் விலையில் 10 ரூபாய் உயர்த்தி வழங்க வலியுறுத்தி பல கோரிக்கைகளை வைத்தும் அரசு கண்டு கொள்ளவில்லை. எனவே மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நக்கலம்பட்டி கிராமங்களில் அடுத்தடுத்து தேனி- மதுரை ஆகிய சாலைகளில் தமிழ்நாடு பார் உற்பத்தியாளர் சங்க மாநில பொது செயலாளர் பெருமாள் தலைமையில் மாவட்ட தலைவர் சந்திரன், செயலாளர் முத்துப்பாண்டி, நிர்வாகிகள் ஆகியோர் தலைமையில் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் 50க்கும் மேற்பட்ட கறவை மாடுகளுடன் நூற்றுக்கும் மேற்பட்ட கறவை பால் உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.


இந்த சாலை மறியல் சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் இருந்து விரைந்து வந்த உசிலம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கரன் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் பிறகு விவசாயிகள் அங்கிருந்து சாலை மறியலை கைவிட்டு புறப்பட்ட சென்றார்கள்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News