சிறுதானிய குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் தமிழக அரசு: பிரதமர் மோடியின் அறிவுரையின்படி நடக்கும் மாற்றம்!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வலியுறுத்தலின் பெயரில் தமிழகத்தில் சிறுதானிய குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் அரசாங்கம்.

Update: 2023-03-09 01:27 GMT

சர்வதேச சிறுதானிய ஆண்டை கொண்டாடும் வகையில் சிறுதானிய கண்காட்சி மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானிய பொருட்களின் அறிமுகம் மற்றும் சிறுதானியம் குறித்த முக்கியத்துவம் குறித்து நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஏற்கனவே கேட்டுக் கொண்டு இருக்கிறார். குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஐக்கிய நாட்டு சபை 2023 ஆம் ஆண்டு சிறுதானிய ஆண்டாக அறிவித்து இருக்கிறது.


குறிப்பாக இந்தியாவில் சிறுதானிய உணவு ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறது. ஆனால் காலப்போக்கில் மக்கள் நவீன உணவிற்கு மாறிவிட்டதன் காரணமாக சிறுதானிய உணவில் சேர்த்துக் கொள்வது குறைந்துவிட்டது. எனவே நோய்கள் அதிகமாக அதிகரித்துவிட்டது. எனவே மீண்டும் சிறுதானியம் உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நாம் நிச்சயமாக வலுவான உடல் நலத்தை பெற முடியும். அந்த வகையில் தமிழ்நாட்டில் சிறுதானியங்களை பயிரிட அரசு சார்பில் தற்பொழுது மானியமும் வழங்கப்படுகிறது என்று தமிழக வேளாண் துறை அமைச்சர் கூறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இது தொடர்பாக சிறுதானிய முக்கியத்துவம் குறித்த புத்தக வெளியீட்டு விழா மதுரை அரசு வேளாண் கல்லூரியில் நடைபெற்றது அப்பொழுது இதை கூறப்பட்டு இருக்கிறது குறிப்பிடத்தக்கது. தமிழர்கள் சிறு தானியங்களை உணவாகவும், மருந்தாகவும் எடுத்துக்கொண்டு பயன்படுத்தினார்கள். நாகரிக வளர்ச்சியினால் மக்கள் உணவு பழக்கத்தை மாற்றியதன் காரணமாக சிறுதானிய உணவுகளால் கிடைக்கும் பலன்கள் குறைந்து விட்டது. எனவே மக்களுக்கு மீண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இவை தொடங்கப்பட்டிருக்கிறது என்று கூறுகிறார்.

Input & Image courtesy: Dinamalar

Tags:    

Similar News