கோவை அவினாசி இடையே ரூ.1620 கோடியில் உயர்மட்ட சாலையின் சிறப்பம்சங்கள்.!

கோவை அவினாசி இடையே ரூ.1620 கோடியில் உயர்மட்ட சாலையின் சிறப்பம்சங்கள்.!

Update: 2020-11-21 17:18 GMT

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.

அதில், கோவை, அவினாசி இடையே ரூ.1,620 கோடியில் உயரடுக்கு மேம்பால திட்டத்திற்கு அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார். இந்த திட்டத்தால் கோவை வழியாக கேரளா செல்லும் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்ட மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.


மேலும், சென்னை வர்த்தக மையம் ஆகிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சின்போது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
 

Similar News