12ம் வகுப்பு தேர்வு நடத்தலாமா? முன்னாள் முதலமைச்சரிடம் ஆலோசனை நடத்திய அமைச்சர் அன்பில் மகேஷ்.!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை தீவிரம் அடைந்து வரும் நிலையில், சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வை பிரதமர் மோடி ரத்து செய்து உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-06-05 05:51 GMT

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை தீவிரம் அடைந்து வரும் நிலையில், சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வை பிரதமர் மோடி ரத்து செய்து உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

ஆனால் தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு நடத்தப்படுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்ற குழப்பம் இன்று வரை மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர்களிடமும் ஏற்பட்டுள்ளது. அதே போன்று தேர்வை நடத்த வேண்டும் என்று 60 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த குழப்பமான சூழலில் சட்டமன்ற உறுப்பினர்களுடன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்துகிறார்.

இன்று நடைபெறும் ஆலோசனையில் முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பாஜக எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 13 பேர் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார். இதில் என்ன முடிவு எடுக்கப்படும் என்று தெரியவில்லை. ஆலோசனை முடிந்தால் மட்டுமே தெரியவரும். ஆனால் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே சிபிஎஸ்இ தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News