அமைச்சர் கைது நடவடிக்கை.. பழிவாங்கும் எண்ணம் பா.ஜ.கவிற்கு இல்லை.. அண்ணாமலை பேட்டி!
நெஞ்சுவலியில் கண்ணீர் விட்டு கதறும் அமைச்சர் செந்தில்பாலாஜி.
திமுக ஆட்சியில் தமிழகத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமானத்துறை அதிகாரிகள் தலைமை செயலகம் மற்றும் அவருடைய வீடுகள் ஆகிய இடங்களில் சோதனை மேற்கொண்டார்கள். சென்னையில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. சோதனையின் முடிவில் அமைச்சர் செந்தில்பாலாஜியை விசாரணைக்கு அழைத்துச் செல்வதாக கூறப்பட்டது. குறிப்பாக அவர் விசாரணை நடத்துவதற்காக வருமானவரித்துறை அதிகாரிகள் அவரை அழைத்துச் செல்ல முற்பட்டார்கள்.
அப்போது அமைச்சருக்கு திடீரென உடல்நலக்குறைவு எனக்கூறி, மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. இது தொடர்பான வீடியோக்கள் தான் தற்போது மிகவும் வைரலாகி வருகிறது. உடல்நலக்குறைவு காரணமாக அமைச்சர் செந்தில்பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.சென்னை, ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது எப்படி என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். குறிப்பாக இது எதிர்க்கட்சி பாஜகவின் வேலைதான் என்று திமுக தரப்பில் கூறப்பட்டு இருக்கிறது. இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறும் பொழுது, "செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையில் கடுகளவு கூட காழ்ப்புணர்ச்சி இல்லை. யாரையும் பழிவாங்கும் எண்ணம் பாஜகவிற்கு இல்லை. செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை பாயும் என்பது முன் கூட்டியே தெரிந்தது தான். உரிய ஆதாரங்கள் இருப்பதால் தான் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது" என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
Input & Image courtesy: News