மின்தடைக்கு காரணம் அணில்: அமைச்சர் செந்தில் பாலாஜி புதிய கண்டுபிடிப்பு.!

மின்வெட்டு ஏன் ஏற்படுகிறது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஒரு பேட்டியில் வித்தியாசமான முறையில் பதில் அளித்துள்ளார். அதில் மின்சார கம்பியில் அணில் ஓடுகிறது. இதன் காரணமாக மின்கம்பியில் உராய்வு ஏற்பட்டு மின்தடை ஏற்படுகிறது என்று கூறினார்.

Update: 2021-06-22 04:59 GMT

மின்தடை ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணம் அணில்தான் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறிய கருத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்து கடந்த ஒன்றரை மாதங்கள் ஆகிறது. ஆட்சி பொறுப்பு ஏற்ற அன்று முதல் இன்று வரை பல்வேறு மாவட்டங்களில் பல மணி நேரங்கள் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுகிறது.




 


இது குறித்து பொதுமக்கள் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்களை கொடுத்துள்ளனர். இதற்கு முன்னர் இருந்த அதிமுக ஆட்சியில்கூட இவ்வளவு புகார் கொடுத்திருக்க மாட்டார்கள். ஆனால் திமுக பொறுப்பேற்ற பின்னர் எங்கு பார்த்தாலும் மின்வெட்டு பிரச்சனை தலை தூக்குகிறது.




 


இந்நிலையில், மின்வெட்டு ஏன் ஏற்படுகிறது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஒரு பேட்டியில் வித்தியாசமான முறையில் பதில் அளித்துள்ளார். அதில் மின்சார கம்பியில் அணில் ஓடுகிறது. இதன் காரணமாக மின்கம்பியில் உராய்வு ஏற்பட்டு மின்தடை ஏற்படுகிறது என்று கூறினார்.

அணில்களால்தான் மின்தடை ஏற்படுகிறதா என்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கிண்டல் செய்து வருகின்றனர்.

Similar News