அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது நடவடிக்கை - தேசிய ST கமிஷன் அனுப்பிய நோட்டீஸ் கரணம் என்ன?
சாதி பெயரை சொல்லி திட்டிய குற்றத்திற்காக அமைச்சர் ராஜகண்ணப்பன் மீதான தேசிய ST கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள முதுகுளத்தூர் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்போதைய போக்குவரத்து அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்றார். மேலும் இந்நிகழ்ச்சியில் அவரை வரவேற்பதற்காக முதுகுளத்தூர் PTO ராஜேந்திரன் உட்பட பல அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள். மேலும் அந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தன்னை ஜாதி பெயர் சொல்லி திட்டியதாக ராஜேந்திரன் அவர்கள் அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். இதையடுத்து ராஜகண்ணப்பன் இடமிருந்து போக்குவரத்து துறை பறிக்கப்பட்டு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பணியாற்றினார்.
இந்நிலையில் புரட்சி தமிழகம் என்று கட்சியைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் இதுகுறித்து டெல்லியில் உள்ள தேசிய எஸ்.சி, எஸ்.டி கமிஷனில் புகார் ஒன்றை அளித்துள்ளார். மேலும் இந்த விவகாரம் குறித்து ஜாதிப் பெயரை சொல்லி திட்டியதற்காக மன உளைச்சலை ஏற்படுத்தியது. மேலும் ராஜ கண்ணப்பனின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 15 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று தற்போது கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை குறித்து ராமநாதபுரம் கலெக்டர் அவர்கள் ஜானி டாம் வர்கீஸ் கூறுகையில், தேசிய ST மற்றும் SC கமிஷனிடம் பேருக்கு நோட்டீஸ் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டு உள்ளார். மேலும் இது குறித்த விரிவான அறிக்கை 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்க உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.எனது விரைவில் அறிக்கை தயார் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.
Input & Image courtesy: Dinamalar news