ஊர் பெயரை மாற்றிய மிஷனரிகள்.. அம்மன் பெயரில் தேவாலயம்.!

தஞ்சாவூர் பேராவூரணி அருகே அம்மன் பெயரில் அமைந்த ஊரின் பெயரை தேவாலயத்தின் பெயராக மாற்றியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Update: 2021-02-16 10:05 GMT

மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான கோவை காருண்யா பல்கலைக்கழகமும் இயேசு அழைக்கிறார், சீஷா உள்ளிட்ட அமைப்புகளும் மத மாற்றத்தில் ஈடுபடுவதாகவும், உள்ளூர்‌ அரசு அதிகாரிகளைக் கைக்குள் போட்டுக் கொண்டு நல்லூர்வயல் என்ற‌ கிராமத்தின் அழகிய தமிழ்ப் பெயரை 'காருண்யா நகர்' என்று மாற்றி விட்டதாக சர்ச்சை எழுந்தது.

அரசு பதிவேடுகளில் நல்லூர் வயல் என்ற பெயரே இருந்த போதும் நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகை மற்றும் காவல் நிலையம், தபால் நிலையம், டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் காருண்யா நகர் என்ற பெயரையே பயன்படுத்துவதாக கிராமத்தினர் குற்றம் சாட்டினர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்து கிராம ஊராட்சி மன்றக் கூட்டத்திலும் பெயரை மாற்ற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

அம்மன் பெயர் கொண்ட ஊரான அழகியநாயகிபுரத்தின் பெருமையை மறைக்க அந்த ஊர்காரனுக்கே தெரியாத சர்ச்சுக்கு அரசு செலவில் விளம்பரம்...

Posted by கமல் கண்ணன் on Friday, 9 October 2020

மிஷனரிகள் கலாச்சாரத்தை அழிப்பதில் எவ்வளவு தீவிரமாக உள்ளனர் என்பதற்கு ஆதாரமாக இதே போன்று மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவா சத்திரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அழகிய நாயகி புரம் என்ற ஊரின் பெயரை 'அழகிய நாயகி புரம் பேராலயம்' 'St.Church Alagiyanayagipuram' என்று பெயர் மாற்றம் செய்ய முயன்றது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இது இந்து முன்னணி அமைப்பாளர்களின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், அம்மன் பெயரைக் கொண்ட ஊரை தேவாலயத்தின் பெயராக மாற்றுவது கண்டிக்கத்தக்கது என்றும், நெடுஞ்சாலை வழிகாட்டி பலகையில் உடனடியாக பெயரை மாற்றாவிட்டால் போராட்டத்தில் குதிப்போம் என்றும் அறிவித்ததை அடுத்து பெயர் மாற்றப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் அமைந்துள்ள கத்தோலிக்க தேவாலயம் அழகியநாயகிபுரம் பேராலயம் என்று அழைக்கப்படுவதாகத் தெரிகிறது. இந்த தேவாலயத்தைச் சேர்ந்தவர்கள் ‌தான் வழிகாட்டி பலகையில் பெயரை மாற்றக் காரணம் என்றும் தெரிகிறது. எனினும் இந்துக்கள் விழிப்பாக இருந்ததால் இந்த மோசடி தடுக்கப்பட்டது. கண் முன்னரே சரித்திரத்தை இவ்வளவு எளிதாக மாற்றி எழுத முடியும் என்றால் நமது முன்னோர்களின் சரித்திரத்தை எப்படி எல்லாம் மாற்றி எழுதி இருப்பார்கள் என்ற அச்சம் எழாமல் இல்லை.

Similar News