கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம்.. முதலமைச்சர் அறிவிப்பு.!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இடையில் போரிட்டு மரணங்களை தழுவி வருபவர்கள் மருத்துவர்களே அதிகமாக உள்ளனர். பொதுமக்களின் உயிர்களை காப்பாற்ற அரும்பாடு பட்டு வருகின்றனர்.;

Update: 2021-05-12 06:29 GMT

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இடையில் போரிட்டு மரணங்களை தழுவி வருபவர்கள் மருத்துவர்களே அதிகமாக உள்ளனர். பொதுமக்களின் உயிர்களை காப்பாற்ற அரும்பாடு பட்டு வருகின்றனர். அது போன்று பணியில் ஈடுபட்டிருந்தபோது, செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். அது போன்ற குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்திருந்தனர்.




 


இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கொரோனா சிகிச்சை பணியில் உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிவாரண உதவி தொகை வழங்கப்படும்.

கொரோனா நோய்த்தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். மருத்துவர்களுக்கு ரூ.30 ஆயிரம், செவிலியர்களுக்கு ரூ.20 ஆயிரம், இதர பணியாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும். இவ்வாறு அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Similar News