மு.க.ஸ்டாலின் பதவியேற்பு அழைப்பிதழை வெளியிட்ட தலைமைச் செயலாளர்.!
வருகின்ற 7ம் தேதி மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். அதற்கான அழைப்பிதழை தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன் வெளியிட்டுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அதிக இடங்களை பிடித்து வெற்றி பெற்றது. இதனையடுத்து ஆட்சி அமைக்க மு.க.ஸ்டாலின் ஆளுநரிடம் உரிமை கோரினார். இதனையடுத்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி ஏற்க வருமாறு அழைப்பு விடுத்தார்.
இதனையடுத்து வருகின்ற 7ம் தேதி மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். அதற்கான அழைப்பிதழை தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன் வெளியிட்டுள்ளார்.
அந்த அழைப்பிதழில் மே 7ம் தேதி காலை 9 மணியளவில் சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெறும், அழைப்பிதழுடன் வர வேண்டும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.