ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மு.க.ஸ்டாலின்.!
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 156 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. அதே போன்று ஆளும் கட்சியான அதிமுக கூட்டணி 75 இடங்களை கைப்பற்றியது.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வருகின்ற 7ம் தேதி முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார். இதனை தொடர்ந்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை, மு.க.ஸ்டாலின் சந்தித்து உரிமை கோரினார்.
அப்போது எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதம் மற்றும் அமைச்சரவை பட்டியலையும் ஆளுநரிடம் வழங்கினார் ஸ்டாலின். ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்பு விழா நடைபெறும் என்று கூறப்படுகிறது.