உண்மையில் இந்த கரிப் சந்தைப்படுத்தும் சீசனில் இந்திய அரசு கரிப் பயிர்களை குறைந்தபட்ச ஆதரவு விலையில் தொடர்ந்து கொள்முதல் செய்து கொண்டிருக்கிறது. பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், ஒடிசா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் இக்கொள்முதல் மிகவும் சுமூகமாக நடந்து வருகிறது.
டிசம்பர் 28-ஆம் தேதி வரையிலான நெல் கொள்முதல் 462.88 LMT ஆகும். இது கடந்த வருடத்தில் கொள்முதல் செய்யப்பட்ட 370.57 LMTயை விட 24.90 சதவிகிதம் அதிகமாகும். குறைந்தபட்ச ஆதரவு விலையில் 87,391.98 கோடி அளவிற்கு நடந்துவரும் கொள்முதல் நடவடிக்கைகளால், 57.47 லட்ச விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.
தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, குஜராத், ஹரியானா, உத்தரப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் PSS திட்டத்தின்கீழ் மத்திய அரசாங்கம் 2020ஆம் ஆண்டில் கரிப் சந்தைப்படுத்துதல் பருவத்தில், 51.66 LMT பல்ஸ் மற்றும் எண்ணெய் வித்துக்களை வாங்க ஒப்புதல் அளித்தது.
பொய் 2: அரசாங்கம் எல்லா நிலங்களையும் பணக்கார முதலாளிகள் மற்றும் தொழிலதிபர்களுக்கு விற்க சதி செய்து வருகிறது
உண்மை: இந்த சட்டம் வாங்குபவருக்கும், விவசாயிகளுக்கும் இடையிலான ஒரு ஒப்பந்த விவசாயத்திற்கு வழி வகுக்கிறது. ஒப்பந்த விவசாயம் என்பது ஒரு விவசாயிக்கும் வாங்குபவருக்கும் இடையிலான சமரசத்திற்கும் சர்ச்சைகளை தீர்ப்பதற்கும் ஒரு வாரியத்தை வழங்குகிறது. அந்த வாரியம் ஒப்பந்தத்தில் இருக்கும் நபர்களுக்கு நியாயமான பிரதிநிதித்துவம் இருக்கும்.
இந்த சட்டம் 3 நிலை சர்ச்சை தீர்க்கும் நுட்பங்களை கொண்டுள்ளது. சமரசக் குழு, துணைப்பிரிவு மாஜிஸ்ட்ரேட் மற்றும் மேல்முறையீட்டு ஆணையம். எந்தப் பிரச்சனையும் 30 நாட்களுக்கும் மேலாக தீர்க்கப்படாமல் இருந்தால், சம்மந்தப்பட்ட கட்சிகள் துணைப்பிரிவு மேஜிஸ்ட்ரேட்டிடம் தீர்வு காணலாம்.
மாஜிஸ்ட்ரேட் முடிவில் கட்சிகளுக்கு திருப்தி இல்லாத பட்சத்தில், அவர்கள் மேல்முறையீட்டு வாரியத்திடம் முறையிடலாம். அது கலெக்டர் மற்றும் துணை கலெக்டரின் கீழ் இருக்கும். அவர் தவறு செய்த கட்சியின் மேல் அபராதம் விதிக்கலாம்.
ஆனாலும் விவசாயிகளின் நிலம் விற்பனை, ஒத்தி, அடகு செய்ய இந்த சட்டத்தின்கீழ் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் நிலம் எந்த ஒரு ஜப்திக்கும் எதிராக பாதுகாக்கப்படுகிறது.
பொய் 3: விவசாயிகள் தங்கள் விலைகளை நிர்ணயிப்பதில் பாதிப்படைவார்கள்
உண்மை: விவசாயிகள் ஒப்பந்தத்தில் ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட விற்பனை விலையில், தங்கள் வாய்ப்பில் விளைபொருட்களை விற்கலாம். அதிகபட்சம் மூன்று நாட்களுக்குள் அவர்கள் விற்பனை தொகையை பெறுவார்கள்.
பொய் 4: வாங்குபவர்கள் விவசாயிகளை சுரண்டுவார்கள்
உண்மை: விளைபொருள் விற்பனை விலை விவசாயிகளின் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். விலை ஏற்ற இறக்கமாக இருக்கும் பட்சத்தில் ஒரு உறுதிசெய்யப்பட்ட விலையும், கூடுதலாக வழங்க வேண்டும் என்றால் அது குறித்த விவரங்களும் ஒப்பந்தத்தில் கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டும். எப்படி ஒரு பொருளின் விலை நிர்ணயிக்கப்படுகிறது என்ற விவரங்களும் இடம் பெற்றிருக்க வேண்டும். இது விவசாயிகளை மொத்த விற்பனையாளர்கள், செயலிகள், பெரிய சில்லரை விற்பனையாளர்கள், ஏற்றுமதியாளர்கள் ஆகியோரோடு வியாபாரம் செய்ய சம வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும்.
பொய் 5: விவசாயிகள் சந்தை ஏற்ற இறக்கங்களின் மூலம் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்
உண்மை: பயிரை பயிரிடுவதற்கு முன்பே அதனுடைய விலையை விவசாயிகளால் உறுதிப்படுத்திக் கொள்ளப்படும். அதிகபட்ச ஏற்ற இறக்கம் இருக்கும் பட்சத்தில் குறைந்தபட்ச விலையை விட அதிக விலை கேட்க விவசாயிகளுக்கு உரிமை இருக்கிறது.
எனவே கணிக்க முடியாத சந்தையின் அபாயம் விவசாயிடம் இருந்து வாங்குபவருக்கு மாற்றம் செய்யப்படுகிறது. விலை நிர்ணயிக்கப்படும் சந்தை விலையில் ஏற்ற இறக்கங்கள் என்றால் விவசாயிகள் பாதுகாக்கப்படுவார்கள்.
விவசாய சட்டங்கள் விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் பட்சத்தில் அதற்கு எதற்காக எதிர்ப்பு இருக்கிறது?
விவசாயத்தின் விளைபொருள் விற்பனையானது விவசாயிகளை தவிர மூன்று முக்கியமான பங்குதாரர்களையும் கொண்டுள்ளது. கமிஷன் ஏஜெண்டுகள், மண்டிகள் மற்றும் அதிகாரிகள் நிரம்பிய அரசு அலுவலர்கள்.
உள்ளூர் APMC மண்டி, கமிஷன் ஏஜெண்டுகள் மற்றும் புரோக்கர்கள் ஆகியோருடன் பெரிதும் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான லாபத்தை தங்களுடைய அரசியல் செல்வாக்கின் காரணமாக எடுத்துக் கொள்கின்றனர்.
இப்பொழுது நடைமுறையில் இருக்கும் அமைப்பு விவசாயிகளுக்கு குறைவான பணத்தை வழங்குகிறது. இந்த சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, விவசாயிகளுக்கு பதிலாக அவர்களுடைய லாபத்தை சுரண்டி வந்தவர்கள் நஷ்டம் அடைவார்கள். இந்த இடைத்தரகர்கள், கமிஷன் மற்றும் அரசியல் செல்வாக்கின் அமைப்பு மறைந்துவிடும். இந்த இடைத்தரகர்கள் தான் இத்தகைய சட்டங்களின் மூலமாக நஷ்டம் அடைவார்கள்.
தி.மு.க தனது 2016 தமிழக தேர்தல் அறிக்கையில் தாங்கள் தற்பொழுது இந்த விஷயங்களை எதிர்க்கிறார்களோ அவற்றை நடைமுறைப்படுத்துவதாக வாக்குறுதி அளித்திருந்தனர். 2016 சட்டசபை தேர்தல் அறிக்கையில் தி.மு.க விவசாயிகள் தங்களுடைய விவசாய விளைபொருட்களை தேசிய மற்றும் சர்வதேச அளவில் தாங்களே விற்க ஒரு புதிய கொள்கை வடிவமைக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தனர்.
அவர்கள் எந்தவித புரோக்கர்கள் தொந்தரவும் இன்றி, இடைத்தரகர்கள் தலையீடும் இன்றி தங்களுடைய விளைபொருட்களை நேரடியாகவே சந்தைக்கு ஏற்ற விலையில் விற்க கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது.
APMC போன்ற சட்டங்களை மாறி வரும் கால சூழலுக்கு ஏற்ப சீர்திருத்தும் என்றும் வாக்குறுதி அளித்திருந்தது. இதைத்தான் சமீபத்தில் உருவாக்கப்பட்ட வேளாண்மை சட்டங்களும் செய்ய முயற்சிக்கின்றன.
இந்த புதிய சட்டங்களின் மூலம் தங்களுடைய சொந்த வேளாண் விளைபொருட்களை சிறப்பான விலைக்கு விற்க விவசாயிகளுக்கு அதிகாரம் கிடைக்கிறது. APMC-யில் தொடர்ந்து விற்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அதையும் தொடர்ந்து செய்யலாம். சந்தையை விரிவாக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அந்த வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. இடைத்தரகர்கள் கமிஷனும், அரசியல் செல்வாக்கும் மறைந்து விடும் என்பதால் விவசாயிகள் வேளாண் சந்தையில் யாருக்கு வேண்டுமானாலும் தங்கள் பொருட்களை விற்கலாம்.
Translated From: THE COMMUNEMAG