தமிழகத்தில் 3 லட்சம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கையடக்க கணினி -  7,500 அரசு பள்ளிகளில் மெய்நிகர் வகுப்பறை!

தமிழகத்தில் 3 லட்சம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கையடக்க கணினி -  7,500 அரசு பள்ளிகளில் மெய்நிகர் வகுப்பறை!

Update: 2020-12-20 07:54 GMT

6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் 3 லட்சம் பேருக்கு கையடக்க கணினி வழங்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

இன்று அனைத்துத் துறைகளிலும் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு பீடுநடை போடுகிறது. தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் 11 மற்றும் 12-ம் வகுப்பு பாடத்திட்டங்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற உயர் பதவிகளுக்கான போட்டித் தேர்வில் தேர்ச்சி பெறும் அளவிற்கு மேம்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு ஊரடங்கு காலத்தில் கைப்பேசி வாங்க இயலாத அரசு பள்ளியில் பயிலும் ஏழை, எளிய மாணவர்கள் தங்குதடையின்றி கல்வி பயில கல்வித்தொலைக்காட்சி மூலமாக பாடத்திட்டங்கள் தொலைநோக்கு சிந்தனையுடன் கற்பிக்கப்பட்டு வருகிறது.

முதலமைச்சர் அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் மருத்துவ கல்வி பயில வேண்டும் என்ற உயரிய நோக்கோடு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி சிறப்பித்து உள்ளார்.

அனைத்து பள்ளிகளிலும் மெய்நிகர் வகுப்பறைகள் (ஸ்மாாட் கிளாஸ்) தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வருகின்ற ஜனவரி 15-ந்தேதிக்குள் 7,500 அரசு பள்ளிகளில் மெய்நிகர் வகுப்பறைகள் தொடங்க 80,000 மெய்நிகர் பலகைகள் பொறுத்தப்படும்.

விஞ்ஞான வளாச்சியை கருத்தில் கொண்டு அறிவியல் கல்வியை வளர்க்கும் விதமாக (அட்டல் டிங்கிரிங் லேப்) அமைக்கவும் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

6, 7 மற்றும் 8-ம் வகுப்பு பயிலும் 3 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு கையடக்க கணினி (TAB) வழங்கப்படும். அதேபோல் ஐ.ஐ.டி., போன்ற இந்திய அரசின் கல்லூரிகளில் சேருவதற்கு அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஜே.இ.இ., போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.

Similar News