தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்.!
தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்.!
கடந்த ஒன்றரை மாதங்களுக்கு பின்னர் மீண்டும் தமிழகத்தில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் கூறியுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை, இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. அதே போன்று சென்னையில் 2 நாட்களுக்கு நகரின் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.