22 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்.!

22 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்.!

Update: 2021-01-14 17:30 GMT

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் அடுத்த வருகின்ற 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த 10 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போதும் மழை விடாமல் பெய்து வருவது பொதுமக்களை மிகுந்து சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக மழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, மதுரை, சேலம், நாமக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கரூர், திண்டுக்கல், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் மற்றும் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக, பாபநாசத்தில் 18 செ.மீ, மணிமுத்தாறில் 16 செ.மீ மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Similar News