குப்பைக் கொட்டுவதற்கு பணம்.. ரூ.10 முதல் ரூ.20 ஆயிரம் வரை.. சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு.!

குப்பைக் கொட்டுவதற்கு பணம்.. ரூ.10 முதல் ரூ.20 ஆயிரம் வரை.. சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு.!

Update: 2020-12-23 09:14 GMT

சென்னையில் ஜனவரி 1ம் தேதி முதல் குப்பைகளை கொட்டுவதற்கு வீடுகளுக்கு 100 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

திடக்கழிவு மேலாண்மை விதிகளுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. இதனை தொடர்ந்து சென்னை மாநகராட்சி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி குப்பைக் கொட்டுவதற்கு வீடுகளுக்கு 10 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையிலும், வணிக நிறுவனங்களுக்கு ஆயிரம் ரூபாய் முதல் 7,500 ரூபாய் வரையிலும் கட்டணம் வசூல் செய்யப்படும்.

ஓட்டல்கள், 300 ரூபாய் முதல் ரூ.3,000 வரையிலும், திரையரங்குகள் 750 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரையிலும் செலுத்தவேண்டும். பொது இடங்களில் அரசியல் மற்றும் வெவ்வேறு நிகழ்ச்சி நடத்துவோர் ரூ.5,000 முதல் 20 ஆயிரம் ரூபாய் வரையிலும், மருத்துவமனைகள் 2,000 ரூபாய் முதல் ரூ.4,000 ரூபாய் வரையிலும் கட்டணம் வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

மேலும் விதிகளை மீறி குப்பைகளைக் கொட்டுவோரிடம் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொது இடத்தில் குப்பைகளைக் கொட்டினால் 500 ரூபாய் வரையிலும், கட்டட கழிவுகளைக் கொட்டினால் 5000 ரூபாய் வரையிலும் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குப்பைகளை தரம்பிரித்து அளிக்காதவர்கள் மீது 5000 ரூபாய் வரையிலும், குப்பைகளை எரித்தால் 2000 ரூபாய் வரையிலும் அபாரதம் விதிக்கப்படும் எனவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது

Similar News