அதிக கடன்கள் வாங்கும் மாநிலம் தமிழகம் தான் - நிதியமைச்சர் பி.டி.ஆருக்கு அண்ணாமலை பதிலடி
இந்தியாவிலேயே அதிக கடன் பெறும் மாநிலம் தமிழகம்தான் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தியாவிலேயே அதிகமாக கடன்கள் பெறக்கூடிய மாநிலமாக தமிழகம் மாறி கொண்டு வருகின்றது. அத்தகைய சூழ்நிலைக்கு மாறி இருக்கின்றது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் கருத்து கூறியுள்ளார். புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற பா.ஜ.க கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச். ராஜா, மகாராஷ்டிரா சட்டமன்ற உறுப்பினர் கேப்டன் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்ற கூட்டத்தில் பங்கேற்ற மாநில தலைவர் உரை நிகழ்த்தியிருக்கிறார்.
மேலும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலைக்கு அந்தக் கூட்டத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. கொட்டும் மழையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் பேசிய அண்ணாமலை அவர்கள் தமிழகத்தில் குட்டி இலங்கை போல ஆட்சி நடைபெற்று வருவதாகவும் விமர்சித்தார். நான் தான் படிப்பதற்கு திமுகதான் காரணம் என்கிறார்கள் அது உண்மையல்ல என்றும், ஆனால் நான் அரசியல் வந்ததற்கு முக்கிய காரணமே தி.மு.க தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய அண்ணாமலை அவர்கள், திராவிட மாடல் என்று சொல்லிக்கொண்டு சமூகநீதியை பின்பற்றாத தி.மு.க ஆட்சியின் பட்டியல் இனத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் தேசியக் கொடியை ஏற்ற முடியாத ஒரு சூழலை உருவாக்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சமூக நீதி என்பது அனைத்து மக்களையும் சமமாக மதித்து அனைவருக்கும் சம உரிமை வழங்குவது ஆகும் அதனை பா. ஜ.க நிச்சயம் செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Input & Image courtesy:Polimer News