சென்னை புறநகரில் காலை முதல் மழை.. சிரமத்திற்கு ஆளான வாகன ஓட்டிகள்.!

சென்னை புறநகரில் காலை முதல் மழை.. சிரமத்திற்கு ஆளான வாகன ஓட்டிகள்.!

Update: 2020-11-19 08:42 GMT

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்களில் அதிகமான மழை பெய்தது. டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக நல்ல மழை பெய்து வருகிறது. விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த மழையால் பல மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. மேலும், சென்னையை பொறுத்தவரையில் லேசான மழை இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியது.


இந்நிலையில் சென்னை புறநகர் பகுதியான தாம்பரம், குரோம்பேட்டை, தாம்பரம் சானிடோரியம், பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம் ஆகிய பகுதிகளில் காலை முதல் மழை பெய்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மழை நீர் சாலையில் தேங்கியுள்ளதால் அப்பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


முன்னதாக அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், தமிழகத்தை பொறுத்தவரை 7 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News