சென்னையை சேர்ந்த 13 வயது பள்ளி மாணவர் பிரதீக். சிறு வயது முதலே தொழில்நுட்பத்தின் மீது மிகுந்த ஆர்வமுடைய இவர், உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய ரோபோவை வடிவமைத்துள்ளார்.
ரஃபி எனப் பெயரிடப்பட்ட இந்த ரோபோ உங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும். நீங்கள் ரோபோவை திட்டினால், மன்னிப்பு கேட்கும் வரை உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்காது. நீங்கள் சோகமாக இருந்தாலும் ரோபோவால் புரிந்து கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளார்.