பச்சிளம் குழந்தையை பேருந்தில் விட்டுச்சென்ற மர்ம நபர்: போலீசார் தீவிர விசாரணை!

சென்னை, நீலாங்கரையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி சரஸ்வதியுடன் புதுச்சேரியில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்வதற்காக அதிகாலை 4 மணியளவில் பேருந்தில் ஏரியுள்ளார்.;

Update: 2022-02-06 08:01 GMT
பச்சிளம் குழந்தையை பேருந்தில் விட்டுச்சென்ற மர்ம நபர்: போலீசார் தீவிர விசாரணை!

சென்னை, நீலாங்கரையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி சரஸ்வதியுடன் புதுச்சேரியில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்வதற்காக அதிகாலை 4 மணியளவில் பேருந்தில் ஏரியுள்ளார்.

அப்போது பேருந்தில் நீலாங்கரை அக்கரை வாட்டர் டேங்க் ஸ்டாபில் ஒரு ஆண் ஏறியுள்ளார். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருப்பதால் தான் வைத்திருந்த குழந்தையை அந்த ஆண் சரஸ்வதியிடம் கொடுத்துள்ளார். அப்போது குழந்தை சரஸ்வதியிடமே தூங்கியுள்ளது.

இதனிடையே பேருந்து மகாபலிபுரம் அருகே சென்றபோது குழந்தை சிறுநீர் கழித்துள்ளது. இதனால் சரஸ்வதி தன்னிடம் குழந்தையை கொடுத்த நபரை தேடியுள்ளார். ஆனால் அந்த நபர் பேருந்தில் இல்லாதததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இது பற்றி சரஸ்வதி நடத்துனரிடம் கூறியுள்ளார். அவர் மகளிர் காவல் நிலையத்தில் பேருந்தை நிறுத்தி குழந்தையை ஒப்படைத்துள்ளார். இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News