நாகையில் கொட்டும் மழை.. வீடு வீடாக சென்று ஆய்வு பணிகளில் ஈடுபடும் அமைச்சர் ஓ.எஸ் மணியன்.!

நாகையில் கொட்டும் மழை.. வீடு வீடாக சென்று ஆய்வு பணிகளில் ஈடுபடும் அமைச்சர் ஓ.எஸ் மணியன்.!

Update: 2020-12-07 09:57 GMT

புரெவிப் புயல் காரணமாக நாகை மாவட்டத்தில் கன மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனை அறிந்த தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், நாகப்பட்டினம் கீழையூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட இறையான்குடி, சிங்கமங்கலம், கீழ்வேளூர் ஒன்றியம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கொட்டும் மழையிலும், வீடு வீடாகச் சென்று வீட்டுக்குள் இருந்த பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார்.

மேலும், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கவும் ஏற்பாடு செய்தார். அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் கூறினார். அவருடன் மாவட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Similar News