நாமக்கல்: மாணவர்கள், ஆசிரியர்கள் 150 பேருக்கு கொரோனா பரிசோதனை.!

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் 11ம் வகுப்பு பள்ளி மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட 150 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Update: 2021-03-17 13:29 GMT

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் 11ம் வகுப்பு பள்ளி மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட 150 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தஞ்சையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 56க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் அப்பள்ளியை சேர்ந்த மற்ற மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதே போன்று நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் உள்ள 11ம் வகுப்பு படிக்கு மாணவர் ஒருவருக்கு காய்ச்சல் இருந்தது. இதனையடுத்து மாணவர் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா இருப்பது உறுதியானது.

இதனையடுத்து மற்ற மாணவர்களுக்கும் பரவியிருக்கும் என்பதால் அனைவருக்கும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இது போன்ற பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து தொற்று ஏற்படுவதால் மற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர்.

Similar News