ரூ.5க்கு நாப்கின்.. கடலூர் மாவட்ட மகளிர் காவல்நிலையங்களில் புதிய திட்டம் தொடக்கம்.!

ரூ.5க்கு நாப்கின்.. கடலூர் மாவட்ட மகளிர் காவல்நிலையங்களில் புதிய திட்டம் தொடக்கம்.!

Update: 2021-02-16 19:20 GMT

தமிழகம் முழுவதும் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் தொடங்கப்பட்டு 28 ஆண்டுகள் கடந்துள்ளது. இந்த காவல் நிலையங்களை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பெண் காவலர்கள் அரசியல் மாநாடு, மற்றும் முக்கிய தலைவர்கள் வருகை, கலவரம் போன்றவற்றுக்காக உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டத்திற்கும் பாதுகாப்பு பணிக்கு சென்று வருகிறார்கள்.

இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் 45 காவல் நிலையங்களிலும், 6 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உள்ளது. பெண் காவலர்கள் பாதுகாப்பு பணிக்கு செல்லும் போது மாதவிடாய் காலத்தில் பெரும் இன்னலுக்கு ஆளாகிறார்கள். இந்த துன்பத்தில் இருந்து விடுபடுவதற்கு கடலூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் ரூ.5க்கு நாப்கின் வழங்கும் திட்டத்தை அம்மாவட்ட எஸ்.பி. அபிநவ் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தை தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து செயல்படுத்தியுள்ளார். பெண்களின் துயரங்களை போக்குவதற்காக எஸ்.பி. தொடங்கி வைத்த திட்டத்திற்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதே போன்று மற்ற மாவட்டங்களிலும் இந்த திட்டத்தை தொடங்கினால் அனைத்து பெண்களும் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News