கலைஞர் டி.வி மீது புகார் ! பிரதமருடைய புகழுக்கும், பெயருக்கும் களங்கம் ! பொய்களை பரப்பியே ஆட்சிக்கு வந்தவங்க இத பண்ணமாட்டாங்களா என்ன ?

நடுநிலை என்ற போர்வைக்குள் இருக்கும் ஊடகங்கள் இப்படி செயல்படும் பொழுது திமுகவின் அதிகாரபூர்வமான தொலைக்காட்சி நிறுவனமான கலைஞர் டிவி பற்றி சொல்லவா வேணும்.

Update: 2021-09-26 03:56 GMT

முந்தைய அதிமுக ஆட்சி தமிழகத்தில் நடைபெற்ற போதிலும் பிரதமர் நரேந்திர மோடி குறித்து ஒரு தவறான பிம்பத்தை இந்த தமிழக ஊடகங்கள் கட்டமைத்தனர். பிரதமர் நரேந்திர மோடியும், பாரதிய ஜனதா கட்சியும்,  தமிழர்களுக்கு விரோதி போல் ஒரு பொய்யாக்கங்களை உருவாக்கினர். 

மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கும்,சட்டங்களுக்கு நம் நாட்டில் எந்த ஒரு பகுதியில் இருந்தும் எதிர்ப்புகள் வராத போது, தமிழகத்தில் மட்டும் எதிர்ப்புகள் வருவது போல ஒரு தவறான கருத்தாக்கங்களை தமிழக ஊடகங்கள் அரங்கேற்றினர். உதாரணம் : நீட் தேர்வு எதிர்ப்பு, C.A.A எதிர்ப்பு இன்னும் பல..

இப்பொழுது தமிழகத்தில் ஆட்சியும் மாறிவிட்டது அதனால் பல நடுநிலை என சொல்லப்படும் ஊடகங்கள் மூக்கணாங்கயிறு இல்லாத மாடு போல் ஓடுகின்றன. மோடி எதிர்ப்பு ! ஸ்டாலின் ஆதரவு ! என்ற ஒரு உறுதியான உள்நோக்கம் கொண்ட கொள்கையோடு தமிழக ஊடகங்களில் செயல்பட்டு வருகின்றன.

நடுநிலை என்ற போர்வைக்குள் இருக்கும் ஊடகங்கள் இப்படி செயல்படும் பொழுது திமுகவின் அதிகாரபூர்வமான தொலைக்காட்சி நிறுவனமான கலைஞர் டிவி பற்றி சொல்லவா வேணும்.

பிரதமர் மோடியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், கலைஞர் டி.வி., செய்தி வெளியிட்டு இருப்பதாக, போலீசில் பா.ஜ., மாநில பொருளாளர் சேகர் புகார் அளித்துஉள்ளார்.

சென்னை தி.நகர் காவல் நிலையத்தில், அவர் அளித்துள்ள புகார் மனு:இரண்டு நாட்களுக்கு முன், கலைஞர் டி.வி., , 'டுவிட்டர்' பக்கத்தில், 'அதானியின் துறைமுகத்தில், 21 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல், மோடியின் தயவுடன் போதைப்பொருள் கடத்தல்?' என்ற வாசகம் பதிவு செய்யப்பட்டிருந்தது.இந்த பதிவு உண்மைக்கு புறம்பானது, அவதுாறானது.

பிரதமர் மீது களங்கம் கற்பிக்கும் நோக்கத்தோடு புனையப்பட்ட செய்தி. எந்த உண்மையோ, ஆதாரமோ இல்லை என்பது தெரிந்தே, பிரதமருடைய புகழுக்கும், பெயருக்கும் களங்கம் கற்பிக்கும் நோக்கத்தோடு, தவறான எண்ணத்தில் செய்தி வெளியிட்டு இருக்கின்றனர். எனவே, இதுதொடர்பாக, கலைஞர் டி.வி., மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.  

இத்தகைய செய்திகளை பரப்பும்  ஊடகம் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Image : LogoPedia

Dinamalar


Tags:    

Similar News