10 கோடி மதிப்புள்ள நடராஜர் சிலை மீட்பு - எங்கிருந்து திருடப்பட்டது?

கடத்தப்பட்டதாக கூறப்படும் மூன்று அடி உயரமுள்ள நடராஜர் உலோக சிலை மீட்க பட்டு இருக்கிறது.

Update: 2022-11-09 10:40 GMT

தமிழகத்தில் உள்ள கோவில்களில் இருக்கும் சிலைகளை திருடி தொன்மையான சிலைகள் எனக் கூறி ஏமாற்றி சட்டவிரதமாக வெளிநாடுகளுக்கு கடத்தி சில கும்பல் விற்பனை செய்து வருகின்றது. இது தொடர்பாக ஏற்கனவே சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு பொது சாறுக்கும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது போல சாருக்கு தகவல் கிடைக்க திருச்சி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அவர்கள் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு சிலை கடத்தல் வழக்கில் ஈடுபட்டது.


இந்த படையினர் கோவை சென்று சம்பந்தப்பட்டவர்களிடம் சிலை வாங்குவது போல் பேசி, ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரும்படி கூறினர். அதன்படி கடந்த ஆறாம் தேதி அதிகாலை 5 மணிக்கு கோவையில் இருந்து பல்லடம் செல்லும் சாலையில் உள்ள இருக்கூரில் மாறுவேடத்தில் காத்திருந்த பொழுது சிலை கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் மூன்று அடி உயரமுள்ள நடராஜர் உலக சிலைகளை வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.


பின்னர் அவர்கள் தன்னுடைய வேடத்தை கலைத்து போலீசார் என்று கூறிய பின்னர் இருவரும் தப்பிக்க முயற்சி செய்தார்கள். சிலையையும் பறிமுதல் செய்து போலீசார் அவர்களை கைது செய்தது. பறிமுதல் செய்யப்பட்ட நடராஜர் சிலை தமிழகத்தில் எந்த ஊரில் உள்ள சிலை? எங்கு இருந்து திருடப்பட்டது,எந்த கோவிலில் இருந்து இவை எடுக்கப்பட்டது என்று குறித்து போலீசார் தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

Input & Image courtesy: Dinakaran News

Tags:    

Similar News