சேலம் திரும்பிய நடராஜன்.. குதிரை வண்டியில் அழைத்துச்சென்ற கிராம மக்கள்.!
சேலம் திரும்பிய நடராஜன்.. குதிரை வண்டியில் அழைத்துச்சென்ற கிராம மக்கள்.!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது. இதற்கு தமிழகத்தை சேர்ந்தவரும் இந்திய கிரிக்கெட் அணியை சேர்ந்த நடராஜனுக்கு முக்கிய பங்கு உண்டு. இதனால் அவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது.
இதனிடையே ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய நடராஜனுக்கு சொந்த ஊர் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் இருந்து விமானம் மூலமாக பெங்களூரு விமான நிலையத்திற்கு நடராஜன் வந்தார். அங்கிருந்து சேலம், சின்னப்பம்பட்டிக்கு வந்த அவருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்புடன் காத்திருந்தனர்.
குதிரை வண்டி, செண்டை மேளம், மற்றும் பட்டாசு வெடித்து அவரை வரவேற்று அழைத்து சென்றனர். கிராம மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டவாறு அணிவகுப்பில் சென்று கொணடிருந்தார். அவரது வீட்டுக்கே அழைத்து சென்று விட்டனர். இதனால் பூரித்துபோன நடராஜன் கிராம மக்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
மேலும், அவர் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளதால் அவரை 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர். சின்னாளப்பட்டி கிராமமே அவரை கொண்டாடி வருகின்றது. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.