பழைய ஓய்வூதியம் தொடர்பான சர்ச்சை: முற்றுப்புள்ளி வைத்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!
தேசிய ஓய்வூதிய திட்டத்தை மேம்படுத்த குழு அமைக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி இருக்கிறார்.
தேசிய ஓய்வூதிய திட்டத்தை மேம்படுத்த குழு அமைக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி இருக்கிறார். 2004 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதிக்கு பிறகு பணியமர்த்தப்பட்ட மத்திய அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்துவது தொடர்பான எந்த ஒரு பரிசினையும் மத்திய அரசு பரிசளிக்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சகம், மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் தங்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தின் பாதி தொகையை ஓய்வூதியமாக பெறுவார்கள்.
அகவிலைப்படி உயர்வு வருகிற போது ஓய்வூதியம் மேலும் அதிகரிக்கும். இந்த பழைய ஓய்வூதிய திட்டம் நிதி ரீதியாக நிலையானது அல்ல. மேலும் இதற்கென பங்களிப்பு இல்லை என்பதால் அரசு கஜானா மீது சுமை அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இருப்பினும் பா.ஜ.க அல்லாத பிற கட்சி ஆளுகின்ற மாநிலங்களான ராஜஸ்தான், ஜார்கண்ட், பஞ்சாப், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் பழக ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக அந்த மாநில அரசுகள் மத்திய அரசிடம் தெரிவித்து இருக்கிறது.
இந்த அரசுகள் என்.பி.எல் எனும் தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் சேர்ந்துள்ள நிதியை திருப்பி தர வேண்டும் என்று கோரி உள்ளன. ஆனால் அது நிதியை திரும்பத் தர முடியாது. அதற்கு சட்டத்தில் இடமில்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறார். மேலும் தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ், மத்திய அரசிடம் ரூபாய் 8,800 லட்சம் கோடி நிதி சேர்ந்திருக்கிறது என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
Input & Image courtesy: News