தேசிய திறனாய்வு தேர்வு.. தருமபுரி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து இண்டூர் அரசுப் பள்ளி மாணவிகள் சாதனை.!

இண்டூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வந்த தி.சாலா, ச.சிவசக்தி, நா.சோனியா, அ.ஜெயப்பிரியா, கு.பவித்ரா ஆகிய 5 மாணவிகள் தேசிய திறனாய்வு தேர்வில் தருமபுரி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Update: 2021-06-21 07:17 GMT

2020, 21 கல்வியாண்டில் மாநில அளவில் நடைபெற்ற தேசிய திறனாய்வு தேர்வில் இண்டூர் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இண்டூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வந்த தி.சாலா, ச.சிவசக்தி, நா.சோனியா, அ.ஜெயப்பிரியா, கு.பவித்ரா ஆகிய 5 மாணவிகள் தேசிய திறனாய்வு தேர்வில் தருமபுரி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த மாணவிகள் அனைவரும் கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள். தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

மேலும், தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை சுமார் 48 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை அரசால் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News