கிறிஸ்தவ பள்ளியில் கட்டாய மதமாற்றம் காரணமாக இறந்த சிறுமி - 7 நாளில் ரிப்போர்ட் வேணும்.. NCPCR ஆணையம் தமிழக DGP-க்கு பிறப்பித்த அதிரடி உத்தரவு!

NCPCR takes cognisance of Hindu minor girl's suicide due to forceful conversion; directs DGP TN to take required action

Update: 2022-01-20 15:01 GMT

அரியலூர் தூய இருதய மேல்நிலைப்பள்ளி மாணவி மதம் மாறச் சொல்லி, பள்ளியில் கொடுத்த மன அழுத்தத்தால், விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பில், குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் நடவடிக்கையை தொடங்கியுள்ளது.

அரியலூர் மாவட்டம் வடுகபாளையத்தைச் சேர்ந்த மாணவி, தஞ்சாவூர் மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி பயின்று வந்தார். 10ம் வகுப்பில் பள்ளியிலேயே முதல் மதிப்பெண் பெற்றவர். அப்போதே பள்ளி நிர்வாகம் அந்த மாணவியை மட்டுமல்லாமல் பெற்றோர்களிடமும் மதம் மாறச் சொல்லி வற்புறுத்தி இருக்கிறது. அவர்கள் மறுத்து விட்டனர். தற்போது 12-ம் வகுப்பு படித்து வருகிற அந்த மாணவியை படிக்க விடாமல் விடுதியை சுத்தம் செய்வது, உணவு சமைப்பது, பாத்திரங்கள் கழுவுவது ,தோட்ட வேலை இதுபோன்ற வேலைகளை வாங்கி படிக்க விடாமல் தொந்தரவு செய்திருக்கிறார்கள்.

விடுமுறை நாட்களில் அனைத்து மாணவிகளையும் அனுப்பிவிட்டு இந்த மாணவியை மட்டும் விடுதியிலேயே தங்க வைத்துள்ளனர். இதனால் மனம் நொந்து போன மாணவி கடந்த 10 தினங்களுக்கு முன்பு பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று இருக்கிறார்.

பெற்றோரிடம் விஷம் அருந்திய தைக் கூறாமல், பள்ளி நிர்வாகம் மருந்து வாங்கிக் கொடுத்து வீட்டுக்கு அந்த மாணவியை அனுப்பி இருக்கிறார்கள். பள்ளி நிர்வாகமும் பெற்றோரிடம் முறைப்படியாக மாணவி விஷம் அருந்தியதை கூறவில்லை.

மாணவியும் பயத்தில் பெற்றோரிடம் கூறவில்லை. வீட்டிற்கு வந்த மாணவிக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கும் பொழுது தான் மாணவி விஷம் அருந்தியது தெரியவந்தது.

உடல் மிகவும் மோசமான நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் மாணவி இறந்தார். மாணவியின் இறப்பிற்கு காரணமானவர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். பள்ளி விடுதி மாணவர்கள் அனைவரையும் முழு விசாரணைக்கு ஆட்படுத்தினால் மதமாற்றக் கொடுமையின் முழு விவரங்கள் தெரியவரும். ஆகவே அரசு பாரபட்சமின்றி விரைந்து செயல்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

சட்ட உரிமை பாதுகாப்பு மன்றம் என்று அழைக்கப்படும் ட்விட்டர் பக்கம், குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையத்தில் (NCPCR) புகார் அளித்தது, மேலும் குழந்தை பேசிய சாட்சிய வீடியோவையும் பகிர்ந்துள்ளது. இதற்கு பதிலளித்த என்சிபிசிஆர் தலைவர் பிரியங்க் கனூங்கோ, உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்திய அரசியலமைப்பின் 25 & 28(3) விதிகள், சிறார் நீதிச் சட்டம், 2015 இன் விதிகள் மற்றும் ஐபிசியின் கீழ் பல்வேறு விதிகளின் கீழ் முரண்பாடுகள் இருப்பதாக ஆணையம் கண்டறிந்தது. சட்டத்தின்படி சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்றும், கடிதம் கிடைத்த 07 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கை அறிக்கையை சமர்ப்பிக்கவும் கோரியுள்ளது.





Tags:    

Similar News