அரசியல் தலையீடு! ஓவர் வேலை! 'பணி அழுத்தம்' காரணமாக திருநெல்வேலி போலீசார் 30 பேர் விருப்ப ஓய்வு!

Nearly 30 Tirunelveli cops take voluntarily retirement due to 'work pressure'

Update: 2021-12-04 09:35 GMT

திருநெல்வேலி மாநகரில் 29 போலீசார் 20 மாதங்களில் விருப்ப ஓய்வு பெற்றுள்ள நிலையில், காவலர்களுக்கு உண்டாகும் மனஅழுத்தம் குறித்த பின்னணி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட விவரங்களின் படி, 24 சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள், மூன்று சப் இன்ஸ்பெக்டர்கள், ஒரு இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு தலைமைக் காவலர் ஆகியோர் ஜனவரி 2020 முதல் செப்டம்பர் 2021 வரை விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

அவர்களில் 25 பேர் விருப்ப ஓய்வு பெற்றனர், மேலும் இருவர் விண்ணப்பித்த சில நாட்களில் இறந்துவிட்டனர். மேலும் இரண்டு காவலர்களின் விண்ணப்பங்கள் செயல்பாட்டில் உள்ளன என ஆர்டிஐ பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பப் பிரச்னைகள், உடல்நலப் பிரச்னைகள் போன்றவையே விருப்ப ஓய்வுக்குக் காரணம் என போலீஸார் தெரிவித்தனர். இருப்பினும், இது குறித்துப் ஓய்வுபெற்ற காவலர் ஒருவர், காவலர்கள் விருப்ப ஓய்வு பெறுவதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று பணி அழுத்தம் என்று குற்றம் சாட்டினார்.

சமீப மாதங்களில், நகரத்தில் உள்ள காவலர்கள் பணி அழுத்தம் குறித்து ஆடியோ கிளிப்பை வெளியிட்ட மூன்று சம்பவங்கள் நடந்துள்ளன. அக்டோபரில், ஒரு எஸ்எஸ்ஐ வாழ்க்கையை முடித்துக்கொண்டார். அவர் மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை முடிவை எடுத்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர். அவருக்கு விருப்ப ஓய்வு வழங்கப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், பணி அழுத்த குற்றச்சாட்டுகளை மறுத்த திருநெல்வேலி நகர காவல் ஆணையர் என்.கே.செந்தாமரைக்கண்ணன், காவலர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக மட்டுமே விருப்ப ஓய்வு பெறுகின்றனர் என்றார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியான பதிலில், நகரின் பல்வேறு காவல் நிலையங்களில் 40 காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


Tags:    

Similar News