நீட் தேர்வு குறித்து ஆராய குழு.. உச்ச நீதிமன்ற ஒப்புதல் பெறப்பட்டதா: தமிழக அரசை விளாசிய உயர்நீதிமன்றம்.!
நீட் தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டைத் தமிழக அரசு எடுக்கு முடியாது.
தமிழகத்தில் நீட் தேர்வு பற்றி ஆராய்வதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் நீதிபதி தலைமையில் ஒரு குழு ஒன்றை ஏற்படுத்தினார். அந்த குழுவில் இடம்பெற்றுள்ள நீதிபதி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்து வருகிறார்.
இந்நிலையில், நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக பாஜக நிர்வாகி கரு.நாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, நீட் தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டைத் தமிழக அரசு எடுக்கு முடியாது. நீட் தாக்கம் குறித்து ஆராயக் குழு அமைத்ததற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் பெறப்பட்டதா என தமிழக அரசை சரமாரியாக சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் நீட் தேர்வு குறித்து தொடர்ந்து தமிழக அரசு குழப்பமான சூழ்நிலையை உருவாக்கி வருவதாகவும் தமிழக பாஜக குற்றம்சாட்டி வருகிறது குறிப்பிடத்தக்கது.