தவறான சிகிச்சையினால் இறந்த தாய் மற்றும் குழந்தை: அரசு மருத்துவமனை முன் பொதுமக்கள் போராட்டம்!

தவறான சிகிச்சையின் காரணமாக இருந்த தாய் மற்றும் குழந்தை அரசு மருத்துவமனை டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இரண்டு நாள் போராட்டம்.

Update: 2023-02-27 03:38 GMT

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிவகாசி பாரதி நகரை சேர்ந்த பன்னீர்செல்வத்தின் மனைவி முத்துமாரி என்பவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இந்நிலையில் முத்துமாரியும் பெண் குழந்தையும் இறந்து விட்டதாக கூறி மருத்துவர்கள் கையை விரித்து இருக்கிறார்கள். பெண் குழந்தை பிறந்த நிலையிலும் தன் மனைவி இறந்து விட்டதாகவும், குழந்தை இறந்து விட்டதாகவும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக மருத்துவர்கள் செய்த தவறான சிகிச்சையின் காரணமாக தான் அவர்கள் இறந்து இருப்பதாகவும் மருத்துவமனை முன்பு அவருடைய உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.


இதனை தொடர்ந்து பன்னீர்செல்வம் விருதுநகர் போலீசாரிடம் அளித்த புகாரியில் தன்னுடைய மனைவி முத்துமாரி மற்றும் குழந்தை இறப்பிற்கு காரணமான டாக்டர்கள் மற்றும் தலைமை மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உடல் பரிசோதனையை நீதிமன்ற நீதிபதி மற்றும் ஆர்.டி.ஓ முன்பு நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார். இதன் பெயரில் விருதுநகர் போலீசார் குற்றவியல் சட்டம் 174-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.


இந்நிலையில் நேற்று பன்னீர்செல்வம் மற்றும் உறவினர்கள் நடவடிக்கை எடுக்க கோரி மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். பேச்சு வார்த்தை நடத்தி உரிய நிவாரணமும் மற்றும் அரசு வேலையும் வழங்கப்படும் என்று உறுதியளித்து இருப்பதாகவும் அதன் பெயரில் போராட்டம் கைவிடப்பட்டதாகவும் கூறப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: Hindu Tamil News

Tags:    

Similar News